வெண்பா தமிழாய்வு மன்றம்

செயல் திட்டம்

வெளியீடு/மதிப்பீட்டு கொள்கை: ஆய்வுக் கட்டுரைகள் இணையதள வெளியீடாக மட்டும் வழங்கப்படும். ஆய்வுக் கட்டுரைகள் இரு அக மதிப்பீட்டு முறைக்கு உட்படுத்தப்படுகிறது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட கட்டுரைகள் மதிப்பீடு செய்த பேராசிரியர்களின் ஆலோசனைப்படி திருத்தம் மேற்கொண்டு மீண்டும் தரம் உறுதி செய்த பின்னரே பி.டி.எப் ஆவணங்களாக இணையத்தில் வெளியிடப்படும். மதிப்பீட்டாளர்கள் கட்டுரைகளுக்குத் தரமான மதிப்புரை வழங்க வேண்டும். நன்முறையில் கட்டுரைகளுக்கு மதிப்புரை வழங்கியவுடன் கருத்து முரண்பாடு இல்லை என்பதைத் தெளிவுறப் பதிவிட வேண்டும். மதிப்பீட்டாளர்கள் கட்டுரைகளில் மேற்கோள்கள் தெளிவுறக் குறிப்பிடாத நிலையில் அதை தெளிவுறச் சுட்டிக்காட்ட வேண்டும். மதிப்பீட்டு செயல்முறையை இரகசியமாகவும் நம்பகமான முறையிலும் செய்ய வேண்டும்.
கருத்துத் திருட்டு நீக்கம்: இவ்விதழ் கருத்துத் திருட்டை ஓர் அறிஞரின் கருத்திற்கு செய்யும் அநீதியாகவே கருதுகிறது. படைப்பாளர்கள் அவர்களின் தகுதிக்கேற்ற மதிப்பை அடைய செய்வது பதிப்புக்குழுவின் நோக்கமாகும். ஆய்வாளர்களின் படைப்பில் கருத்துத் திருட்டு இருந்தால் பதிப்புக்குழு அக்கட்டுரையை நிராகரித்துவிடும்.
பதிப்பு நெறிமுறைகள் & முறைகேடு அறிக்கை: கட்டுரைகள் ஆய்வுநெறிமுறைகளைப் பின்பற்றாமல் அமைந்தால் பதிப்பகம் நடவடிக்கை எடுக்கும். தரமான ஆய்வு மற்றும் பதிப்பு முறைகளை உறுதி செய்ய தகுந்த முடிவெடுக்கப்படும். ஆய்வுசார் முறைகளில் ஏதேனும் குற்றம் இழைக்கப்படின் அக்கட்டுரை பதிப்பில் இருந்து நீக்கப்படும். கட்டுரைகளில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென்றால் பதிப்பாசிரியருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். கட்டுரை நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், விளக்கங்கள் மற்றும் மன்னிப்புக்கோருதல் ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிவிப்பு செய்யப்படும். இதழின் முழுக்கோப்பு இண்டர்நெட் ஆர்க்வில் பாதுகாக்கப்படும்.