வணக்கம்

தமிழ்மொழி செம்மொழி ஆகும். தமிழ் மொழியின் தோற்றம் இயற்கையில் பிறந்ததேயாம். அதன் அளப்பரிய தாக்கம் உலகத்தின் பல்வேறு மொழிகளிலும் காணப்படுகின்றது. உலகின் முதல் இலக்கண நூலான "தொல்காப்பியம்" தமிழில் தான் எழுதப்பட்டது. அந்நூலில் மொழியின் சிறப்பு மற்றும் பயன்பாடு விளக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியத்தில், சங்க இலக்கியம் தமிழ்மக்களின் தொன்மையான பாரம்பரியத்தைப் பிரதிப்பலிக்கின்றது. தமிழ்மொழியின் சிறப்பு அதன் தற்போதைய நிலை மற்றும் மறுமலர்ச்சி தன்மையை அனைவரும் அறிந்து கொள்வதற்காகத் தான் "வெண்பா இலக்கிய ஆய்விதழ்" உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழி மற்றும் இலக்கியத்தின் சிறப்பினை மென்மேலும் மெருகேற்றுவது பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், படைப்பாளர்கள் மற்றும் புரவலர்கள் ஆகியோரின் கடமையாகும்

நோக்கம்

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளிவரும் வெண்பா இலக்கிய பன்னாட்டு ஆய்விதழ், தமிழ் வளர்ச்சியின் நவீன முன்னேற்றங்களை அனைவரும் மதிப்பிட்டு புரிந்து கொள்ள உதவுவது இதன் நோக்கமாகும். இவ்விதழானது தமிழ்மொழி மற்றும் இலக்கிய கலாச்சாரம், நாட்டுப்புறக்கலை, கோயிற்கலை, சித்த மருத்துவம், மொழியியல், திறனாய்வு, தமிழிலக்கிய படைப்புகள், உளவியல், பெண்ணியம், ஒப்பியல் நோக்கு, உலகளாவிய மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் போன்ற இன்னபிற தமிழ் சார்ந்த பிற தளங்களையும் நோக்கும் விதமாய் இந்த மின்னிதழ் அமைந்துள்ளது

அழைப்பு

பேராளர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் நேர்த்தியான ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. அனைத்து ஆய்வுக் கட்டுரைகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு இணையத்தளத்தில் வெளியிடப்படும்

பதிப்புரிமை

கட்டுரையாளரிடம் உரிம மாற்று படிவம் பெற்று காப்புரிமையைச் சஞ்சிகையே பெற்றுக் கொள்ளும். ஆய்வுக்கருத்துகள் படைப்பாளர்களுடையது. பதிப்பாசிரியர் பொறுப்பேற்றுக் கொள்ளமாட்டார்.